Sunday, May 19, 2013

அதிநேதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்திற்காக நான் எழுதிய பாடல்கள் 

பாடல் 1                                                   குடும்ப பாடல் 

பல்லவி  

ஆண்
அன்னை என்ற ஒரு தேவதையை காலைத்  தொட்டு வணங்கு
அப்பன் என்ற ஒரு தேவனையும் பூஜை செய்யத் துவங்கு
அந்த சாமியே பிரதி ரூபமாய் வீடு வந்ததிங்கே
எந்த கோயிலும் ஈடாகுமா உங்கள் பாதம் முன்பே

சரணம் 1
ஆண் 
நான் கொஞ்சம் வாடினால்..  தாயுள்ளம் வாடுமே
என் மேனி நோயினால்..  தந்தைக்கு நோகுமே
நிலையாக உலகத்தில்  ஒன்றிங்கு உள்ளது..
தாய் தந்தை அன்புதான் வேறென்ன சொல்வது
என் சுவாசக்காற்றும் நீயே

பெண் 
என் உயிரின் உயிரும் நீயே

இருவரும் 
இந்த அன்பு கூட்டில் யாரும்..
தொழும் தெய்வம் நீங்கள் தானே 

சரணம் 2
ஆண் 
ஊரெங்கும் பார்க்கவே..  கல்யாண வேடிக்கை
அறுபதாம் கல்யாணம்.. அன்புக்கு காணிக்கை
யார் செய்த யாகமோ.. இரு உள்ளம் சேர்வது
நான் செய்த யோகமோ.. உன் பிள்ளையானது
அந்த கோபுரத்தின் பெருமை
இந்த பூமித்தாயின் பொறுமை
ரெண்டும் சேர்ந்த ஒற்றை வடிவம்
எனைப் பெற்றவர்கள் உருவம்



அதிநேதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்திற்காக நான் எழுதிய பாடல்கள் 

பாடல் 2                                              காதல் பாடல் 

பல்லவி 
ஆண் 
மோனலிசா  மோனலிசா மீண்டும்  ஏன் பிறந்தாய் என்னை கொன்றிடவே
பெண் 
மோனலிசா மோனலிசா மோகத்தில் அழைத்தேன் நீ வா வென்றிடவே
ஆண் 
நானும்  நானாய் இல்லை மோனா
உன் இடையாலே விடை சொல்ல வா
பெண் 
காணும் கனா நீயல்லவா
என் எதிர் வந்தாய் வரமல்லவா 



சரணம் 1
பெண் 
ABCD கற்கும் முன்னே  LOVE கற்றுக்கொண்டேன்
எத்தனையோ பேர்கள் உண்டு உந்தன் பேரே இஷ்டம் என்றேன்
ஆண் 
தேவதைகள் வந்தால் கூட நீதான் ரொம்ப அழகென்பேன்
தேனமுதை தந்தால்  கூட நீயே ரொம்ப சுவை என்பேன்
பெண்
காதல் வந்தால் காமம் வரும்
தள்ளி நில்லு காதல் வெல்லும்
ஆண் 
என்  உள்ளத்தில்  பாய்கின்ற வெள்ளமே
நான் கடலாகி கடலாகி உனைத் தாங்கவா


சரணம் 2
ஆண்
உன்னை கண்ட நாள் முதலாய் உள்ளுக்குள்ளே ஏதோ ஆசை
என் உயிருக்குள் எங்கோ ஒரு ஒற்றை குயில் கூவும் ஓசை
பெண்
என் கற்றை குழல் கார்குழலும் வெட்கம் கொண்டு சிவக்காதா
என் கன்னம் ரெண்டை மீசை குத்தும் நாளும் இங்கு வாராதா
ஆண்
உன் ஆசைகள் ஓராயிரம்
என் ஆசைகள் ஓராயிரம்
பெண் 
நீ தீண்டிட தீண்டிட தீர்ந்திடும்
என் தீராத ஆசைகள் மோட்சம் கொள்ளும்



அதிநேதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்திற்காக நான் எழுதிய பாடல்கள் 

பாடல் 3                               நாயகி  அறிமுக பாடல் 

தொகையறா 
எங்குள்ளாயோ  என் மன்னவா..
நீ யாரென்று என் கண் தேடுதே ...
சாமியிடம் கேட்டுவைத்தேன்  நீயும் தேரேறி  வந்துவிடு

பல்லவி 
ஹேய்.. செந்தூரப் பூவே நீ கொஞ்சம் கேளு
சில்லென்று வீசுகின்ற காற்றே நீ கேளு
ஆற்றோடு போகும் தண்ணீரே கேளு
ஆகாயம் தொட்டு போகும் மேகம் நீ கேளு
என்னை கட்டப் போகும் மன்னவனும் யாரு
எந்த நாட்டுக்கு நான் ராணி என்று கேளு
நிலவே நிலவே கேளு
நிலமே நிலமே கேளு
காற்றே காற்றே கேளு
காதை  கொடுத்து கேளு
தேசிங்கு மகராஜன் போல் வருவானவன்
பாரெங்கும் எனை தேரேற்றிச்  செல்வானவன்  


சரணம் 1
என் கண்ணே..  என் பொன்னே..  என்று என்னை கொஞ்சி அழைக்க
மருதாணி பாதங்கள்..  மண்ணில் பட்ட போது  துடிக்க
என் தேவி என் தெய்வம் என்றென்னை தொழுது நிற்க
கண் மூடி  கண் திறந்தால்  என் எதிரில் வந்து நிற்க
தேசிய கோடி பறக்கும் தேசமெங்கும் தேடினும்
தேசிய கோடி பறக்கும் தேசமெங்கும் தேடினும்
உன் போலே ஆளே இல்லை என்று சொல்லணும்

சரணம் 2
சீதைக்கு.. ராமன் போல்   எனக்கும் ஒரு ராமன் வேண்டும்
கண்ணுக்கு கண் போல காக்கும் கண்ணனாக வேண்டும்
ஊரெல்லாம்  வாய் பிளந்து தினம் உன்னை பார்க்க வேண்டும்
உன்னை புகழும் மொழி கேட்டு நான் கர்வம் கொள்ள வேண்டும்
எட்டு திசையெங்கும் தேடி தேடி பார்த்தேன்
எட்டு திசையெங்கும் தேடி தேடி பார்த்தேன்
என்று நீ வருவாய் என ஜோசியமும் கேட்டேன்  







அதிநேதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்திற்காக நான் எழுதிய பாடல்கள் 

பாடல் 4                                           காதல் பாடல் 

பல்லவி  
பெண்
கொல்லவா  கொல்லவா
கொஞ்சி கொஞ்சி கொல்லவா 
 ஆண் 
பொன்னுடல் சேர்ந்தால் போதும்
இன்னொரு சொர்க்கம்  வேண்டாம்
இவ்வொரு வாழ்க்கை போதும்
இன்னொரு  ஜென்மம் வேண்டாம்
பெண் 
ஆசை அலையாய் அடிக்குதடா
ஆடை விலகப் பார்க்குதடா
கொல்லவா  கொல்லவா ..
கொஞ்சி  கொஞ்சி கொல்லவா
அள்ளவா  அள்ளவா ..  அள்ளி அள்ளி தின்னவா 

சரணம் 1
பெண் 
கண்ணிலே காதல் பாடம்
கட்டிலில் காமன் பாடம்
கற்று நான் தருவேன் கண்ணா வா.. வா.. வா ...
ஆண் 
பெண்ணுடல்  பனம் கற்கண்டு
நித்தம் நான் உன்னை உண்டு
என் மோகம் தீர்த்துக்கொல்வேனே  ஏ..  ஏ..  ஏ....
பெண் 
கட்டழகன் கை அணைக்க
காலம் பல காலம் வரை காத்திருந்தேன் 
ஆண் 
காமன் வந்து மெய் அணைக்க
காற்று போல கால் பறந்து நானும் வந்தேன்
பெண் 
பாடங்கள் சொல்வாயா ..
பாயோடு கொள்வாயா ..
என் நெஞ்சில் ஏக்கம் தீர்க்க வா
உன் காதல் அடிமை நான் ....

சரணம் 2
ஆண் 
பனிமலை பள்ளம் நீயே
எரிமலை எந்தன் மெய்யே
இரண்டும் சேர்ந்தால்  உருகிப் போகாதா  ஆ.. ஆ.. ஆ..
பெண் 
ஆணியை உன்னை ஆக்கு
மேனியை மெல்லத் தாக்கு
காணியை உழும் ஏறாய் நீ வா.. வா.. வா..
ஆண் 
காலை முதல் மாலை வரை
காலும் கையும் சேர்த்து ஒரு யுத்தம் செய்ய
பெண் 
காமன் வரம் வாங்கி வந்து
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் பூஜை செய்ய
ஆண் 
என்  மேனி உன்னோடு உன் மேனி என்னோடு
என் நெஞ்சில் ஏக்கம் தீர்க்க வா
உன் காதல் அடிமை நான் ...

























நான் ஈ திரைப்படத்தில் நான் எழுதிய பாடல் வரிகள்

இடம் 1









உள்ளத்தில் உலை பொங்கும் ஓ மௌனமே..
ஒரு பார்வை சிறு பார்வை எனைப் பாரடி
பிந்து பிந்து என்னைப் பாரு
தூரம் விலகி போகாதே













இடம் 2








 
                                                          கனவாகி போவென்றேன்  என் காதலை
                                                          முடியாமல் தவிக்கின்றேன் என் காதலே














இடம் 3



















என் வாழ்வும் என் சாவும் உனக்காகவே
உயிர் தந்து காப்பேனே என் காதலே






















இடம் 4

ஈயின் ரெக்கை அளவு
வாய்ப்பு வந்து வாசல் நின்று
அதிர்ஷ்டம் உனதே இனி என்றது 
ஆகாயம் உனதென்றது