Monday, October 11, 2010

லிப்ஸ்டிக்


உன்

உதடு தொட்ட காரணத்தால்

வெட்க்கிச் சிவந்ததோ...!

லிப்ஸ்டிக்

Saturday, August 28, 2010

கடவுள்

கண்திறந்து பார்க்கும் சாமி
என நம்பி
கண்மூடித் தவமிருக்கும் மூடனே
கண் திறந்து பார்..
கடவுளே நீதான்
என்றுணர்வாய்.

உலகம் அழியட்டும்

மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
நிறத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஆளாளுக்கு
அடித்துக்கொண்டு சாவதை விட
2012- இல்
உலகம் அழிந்து போகட்டும்.
மதம் இனம் நிறம் மொழியற்ற
புதியதோர் உலகு பிறக்கட்டும்
அங்கு
ராஜபக்க்ஷே ஹிட்லர் போன்றோரும்
அநியாயத்தைக் கண்டு பொங்காமல்
எழுதிக் கிழிக்கும்
படித்து ரசிக்கும்
நம் போன்ற
கேடுகெட்ட மனிதரெல்லாம்
கருவிலேயே கலைந்து போகட்டும்.

Sunday, May 2, 2010

கிறுக்கித் தந்த பொழுது

வெற்றுக் காகிதம் கூட

விலை மதிப்பற்றதானது

நீ

கிறுக்கித் தந்த பொழுது

காற்றுணர்ந்த காதல்

உன்

முகம் படர்ந்த கூந்தலை

கோதிவிட

கைகள் குறுகுறுத்த கணம்

காற்று வந்து

உன் குழல் கலைத்துப் போனது

ஆம்

காற்றும் உணர்ந்த காதல் எனது

Saturday, May 1, 2010

கண்டெடுக்கப்பட்டது

தொல்பொருள் ஆய்வாளன்

என் தொண்டைக் குழியை

குடைந்த போது

கண்டெடுக்கப்பட்டது

என் பதின் வயதில்

நான் சொல்லப் பயந்து

சொல்லாமல் அடைகாத்த

சில சொற்களும்

என் முதல் காதலும்

இன்னும் சிறிது காலம்தான்

என்னை

கம்பளிப்பூச்சி எனப் பார்த்து

இகழ்ந்தன சில வாய்கள்

சுருங்கின சில புருவங்கள்

நான் கூடு புகுந்து விட்டேன்

இன்னும் சிறுது காலம் தான்

வாய்கள் பிளக்கவும்

புருவங்கள் உயர்த்தவும்

இல்லை

நிலவில்
பாட்டி வடை சுட்ட கதை
எல்லா குழந்தைகளுக்கும் சொல்லப்படுகிறது
ஆனால் இதுவரை
யாருக்காக சுடுகிறாள் என்று
எந்த தாயும் சொன்னதுமில்லை
எந்த சேயும் கேட்டதுமில்லை