Sunday, May 2, 2010

கிறுக்கித் தந்த பொழுது

வெற்றுக் காகிதம் கூட

விலை மதிப்பற்றதானது

நீ

கிறுக்கித் தந்த பொழுது

காற்றுணர்ந்த காதல்

உன்

முகம் படர்ந்த கூந்தலை

கோதிவிட

கைகள் குறுகுறுத்த கணம்

காற்று வந்து

உன் குழல் கலைத்துப் போனது

ஆம்

காற்றும் உணர்ந்த காதல் எனது

Saturday, May 1, 2010

கண்டெடுக்கப்பட்டது

தொல்பொருள் ஆய்வாளன்

என் தொண்டைக் குழியை

குடைந்த போது

கண்டெடுக்கப்பட்டது

என் பதின் வயதில்

நான் சொல்லப் பயந்து

சொல்லாமல் அடைகாத்த

சில சொற்களும்

என் முதல் காதலும்

இன்னும் சிறிது காலம்தான்

என்னை

கம்பளிப்பூச்சி எனப் பார்த்து

இகழ்ந்தன சில வாய்கள்

சுருங்கின சில புருவங்கள்

நான் கூடு புகுந்து விட்டேன்

இன்னும் சிறுது காலம் தான்

வாய்கள் பிளக்கவும்

புருவங்கள் உயர்த்தவும்

இல்லை

நிலவில்
பாட்டி வடை சுட்ட கதை
எல்லா குழந்தைகளுக்கும் சொல்லப்படுகிறது
ஆனால் இதுவரை
யாருக்காக சுடுகிறாள் என்று
எந்த தாயும் சொன்னதுமில்லை
எந்த சேயும் கேட்டதுமில்லை